காரில் திருட்டு! கிரடிட் கார்டு முக்கிய ஆவணங்களை இழந்துவிட்டேன்! - தெரசா கோக்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 23: நேற்று மாலை தனது காரில் திருட்டு நடந்தை  அடுத்து, செபுத்தே  நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக், கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL நிர்வாகத்திடம் முறையிட்டார். புக்கிட் கியாரா பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் அடிக்கடி சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு கேட்டுக் கொண்டார்.

கோக் மாலை 6.15 மணியளவில் பூங்காவில் ஜாக்கிங் சென்றதாகவும், இரவு 7 மணியளவில் தனது காருக்குத் திரும்பியபோது உடைப்பு ஏற்பட்டதைக் கண்டதாகவும் கூறினார்.

முன்பக்க பயணி இருக்கும் ஜன்னல் உடைக்கப்பட்டதாகவும், தனது கைப்பை காணாமல் போனதாகவும் அவர் கூறினார்.

நான் சுமார் RM2,000 ரொக்கம் மற்றும் எனது அடையாள அட்டை, பல்வேறு கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற முக்கிய ஆவணங்களையும் இழந்துவிட்டேன் என்று அவர் கூறினார்.

தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் காவல் நிலையத்தில் உடனடியாக ஒரு காவல் புகாரை அளித்ததாகவும். தடயவியல் அதிகாரிகள் சிறிது நேரத்தில் வந்து தனது வாகனத்திலிருந்து புகைப்படங்களை எடுத்ததாகவும், கைரேகைகளை எடுத்ததாகவும் கோக் கூறினார்.

கார் உடைப்புகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருட்டு அடிக்கடி நடப்பதைக் குறிப்பிட்ட கோக், DBKL-ஐ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

புக்கிட் கியாரா பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான போலீஸ் விசாரணைகளை எளிதாக்குவதற்காக, டிபிகேஎல் சிசிடிவி கேமராக்களை நிறுவும் என்று தாம் நம்புவவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *