சிகாமட்டில் இன்று அதிகாலை மீண்டும் நில நடுக்கம்!
- Shan Siva
- 30 Aug, 2025
கோலாலம்பூர், ஆக் 30: ஜொகூர், சிகாமட்டில் இன்று காலை 7.29 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிகாமட்டில் இருந்து வடமேற்கே சுமார் 10 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
நிலைமையை கண்காணித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.
நேற்று, அதிகாலை 4.24 மணிக்கு சிகாமட்டில் இருந்து வடகிழக்கே சுமார் 12 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



