சுமத்திராவில் நில நடுக்கம் - கெடா, பெர்லிஸ் - பினாங்கில் அதிர்வு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 3: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திராவின் மேற்கு கடற்கரையருகே நேற்று மதியம் 12.56 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது. அதன் அதிர்வுகள் மலேசியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டன.

மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா, நிலநடுக்கம்  10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, இந்தோனேசியாவின் Simeulue தீவின் தென்கிழக்கில் 112 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு உள்ளிட்ட வடக்கு மாநிலங்களிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று MetMalaysia தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள், MetMalaysia வழங்கியுள்ள ஆன்லைன் கருத்துக்கணிப்பு படிவத்தை பூர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *