ரஷ்யாவில் நில நடுக்கம்! மலேசியாவில் சுனாமி அபாயம் இல்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 30: ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா இன்று தெரிவித்துள்ளது.

மலேசிய நேரப்படி காலை 7.24 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து தென்கிழக்கே 107 கி.மீ தொலைவில் 42 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்ததாக மெட்மலேசியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, இந்த நிலநடுக்கம் 8.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் சுனாமி எச்சரிக்கைகளை விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *