ஜொகூரில் 8 வது முறையாக மீண்டும் நில நடுக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர், செப் 3: ஜொகூரில் எட்டாவது முறையாக இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ஜொகூர் பாரிட் சூலோங்கில் உள்ள ஸ்ரீ மேடானில் 2.9 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி சிகாமட்டில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு எட்டாவது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா யோங் பெங்கிலிருந்து தென்மேற்கே சுமார் 10 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மெட்மலேசியா நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *