விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்கப்பட்டன!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர்பாரு, ஜூலை 18-

கடந்த வாரம், ஜொகூர் கேலாங் பாத்தாவில் உள்ள சுங்கை பூலாயில் விழுந்து விபத்துக்குள்ளான அரச மலேசிய போலீஸ் படையின் ஹெலிகாப்டரின் பாகங்கள், நேற்று காலை 11 மணியளவில் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டன.

தொடர் விசாரணைக்காக, அவை சிலாங்கூர், சுபாங்கில் உள்ள வான் நடவடிக்கை படை, பி.ஜி.யூ-விற்குக் கொண்டு செல்லப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்பு, பொது அமைதி துறை, கேடிஎன். கே.எயின், பி.ஜி.யூ கமாண்டர் டத்தோ நோர் ஷாம் முஹ்மட் ஜானி தெரிவித்தார்.

விபத்துக்கான விரிவான விசாரணையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு, (பி.எஸ்.கே.யூ) மேற்கொள்ளும் என்று டத்தோ நோர் ஷாம்' கூறினார்.நேற்று அதிகாலை தொடங்கி பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கட்டம் கட்டமாக, 9எம்-பிஎச்ஜி எனும் பதிவு எண்ணைக் கொண்ட ஏஎஸ் AS355என் ரக ஹெலிகாப்டரை நீரில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அரச மலேசிய போலீஸ் படையின் பல்வேறு இயந்திரங்கள், ஒரு கிரேன் கப்பலைப் பயன்படுத்தி ஹெலிகாப்டரின் சிதைவுகள் வெளியேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.அரச மலேசிய கடற்படை இரண்டாவது மண்டல கடல்சார் போலீஸ் படை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் ஆகியோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *