அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 3’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 17-

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன்மூலம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தைத் திரையரங்குகளில் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் 2024ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

‘டிமான்டி காலனி 3’ படத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமார், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

திகில், மர்மம், வன்முறை மற்றும் அதிரடியான காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதால் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டுக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *