அரண்மனையில் நடக்க போகும் ரஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம்!

top-news
FREE WEBSITE AD

திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவிற்கு ஏற்கனவே ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அவர்களின் திருமணத் தேதி குறித்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வரும் 2026-ம் ஆண்டு, பிப்ரவரி 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக இவர்களது காதல் குறித்து கிசுகிசுக்கப்பட்டாலும், திருமணத் தேதி குறித்த இந்த புதிய தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தத் திருமண ஏற்பாடுகள் மிகவும் ரகசியமாகவும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை இரு நடிகர்களின் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், உதய்பூரில் உள்ள ஒரு பாரம்பரிய அரண்மனை இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' எனத் திரையில் ஜொலித்த இந்த ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் இணையப் போவதை சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *