பாசிர் கூடாங் தொழிற்சாலையில் வாயுக் கசிவு! மருத்துவமனையில் மூவர் அனுமதி
- Shan Siva
- 01 Oct, 2025
பாசிர் கூடாங், அக் 1: பஜாலான் பிளாட்டினத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட வாயுக் கசிவினால், மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11.11 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில், மீட்புக குழு வருவதற்கு முன்பே
மூன்று பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைக்குள் ஹைட்ரஜன் சல்பைடு வாயு கசிவு இருப்பதை சோதனைகள் உறுதிப்படுத்தியதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி சர்ஹான் அக்மல் முகமது தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



