10 கிலோ எடையை இழந்த ஜஸ்லிண்டா
- Shan Siva
- 08 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 8: பத்து
பூத்தே மலையில், மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது இரண்டு வாரங்களாகக் காணாமல்
போன ஜஸ்லிண்டா சலுதீன், கிட்டத்தட்ட 10 கிலோ எடையை இழந்துள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 49 வயதான அவர் சீரான நிலையில் இருப்பதாகவும்,
அவரால் நன்றாக சாப்பிடவும் பேசவும்
முடிவதாகவும் தாப்பா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வான் இம்மி சலீம் கூறினார்.
முன்னதாக, வான் இம்மி, பேராக் செயற்குழு உறுப்பினர்களான ஏ. சிவனேசன் மற்றும்
அஸ்லான் ஹெல்மி ஆகியோருடன் மருத்துவமனையில் ஜஸ்லிண்டாவைப் பார்க்கச் சென்றார்.
நெடுநாள்கள் காட்டில்
இருந்ததன் விளைவாக பாதிக்கப்பட்டவருக்கு பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்
என எதிர்பார்க்கப்படுவதாகவும் வான் இம்மி கூறினார்.
சிகிச்சை முழுவதும்
அந்தப் பெண் மிகுந்த உற்சாகத்துடனும் நேர்மறையான அணுகுமுறையுடனும் இருந்ததாக அவர்
கூறினார்.
தாப்பா அருகே உள்ள பத்து பூத்தே மலையில் மே 24 முதல் காணாமல் போயிருந்த ஜஸ்லிந்தா, கடந்த சனிக்கிழமை போஸ் முசோவில் உள்ள கம்போங்
லுபுக் கஹாரு அருகே ஒரு பழங்குடி கிராமவாசியால் பத்திரமாக மீட்கப்பட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



