அமைச்சரவையை அம்னோ ஆதிக்கம் செய்யத் தொடங்கி விட்டதா?- மறுக்கிறது அம்னோ!
- Muthu Kumar
- 13 Jul, 2025
குவாந்தான், ஜூலை 13 -
இயற்கை வளங்கள் மற்றும் நீடித்த சுற்றுச் சூழல்துறை அமைச்சின் பொறுப்புகளை கவனித்துக் கொள்வதில் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி நியமிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, அமைச்சரவையை ஆதிக்கம் செய்ய அம்னோ தொடங்கி விட்டது என்று கூறப்படுவதை அக்கட்சி மறுத்திருக்கின்றது.
மக்களவைக் கூட்டம் விரைவில் நடைபெறவிருப்பதன் காரணத்தினால்தான், செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அமாட் ராஜினாமா செய்திருக்கும் அந்த அமைச்சின் பணியை கவனித்துக் கொள்வதற்காக அரசாங்கம் தம்மை நியமித்திருப்பதாக ஜொஹாரி குறிபிட்டார்.
அம்னோ தற்போது 26 நாடாளுமன்றத் தொகுதிகளை மட்டுமே கொண்டிருப்பதால், அமைச்சரவையையோ அரசாங்கத்தையோ அதனால் ஆதிக்கம் செய்ய முடியாது என்று. அம்னோ உதவித் தலைவருமான ஜொஹாரி தெளிவுபடுத்தினார். அரசாங்கத்தை நடத்தி வரும் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி தற்போது மக்களவையில் 148 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.
'இதுதான் நடப்பு அரசாங்கத்தின் வலிமையாகும். அதோடு இதுவரையில், இக்கூட்டணியில் இருந்து யாரும் இன்னும் விலகவும் அதாவது தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்ளவில்லை என்று. குவாந்தானில் நேற்று சனிக்கிழமை நடந்த குவாந்தான் அம்னோ தொகுதிக் கூட்டத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது தோட்டத்துறை அமைச்சருமான ஜொஹா தெரிவித்தார்.
கடந்த மே மாதத்தில் நடந்த பிகேஆர் கட்சித் தேர்தலில் தமது உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் தோல்வியுற்ற பின்னர், தமது அமைச்சர் பதவியை நிக் நஸ்மி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரின் அமைச்சின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பு தற்போது ஜொஹாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதே கட்சித் தேர்தலில் தமது துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் தோல்வியுற்ற பின்னர் ரஃபிஸி ரம்லியும் தாம் வசித்து வந்த பொருளாதாரத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



