மாஸ் எர்மியாத்தி ராஜினாமா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 19: மஸ்ஜித் தானா எம்பி மாஸ் எர்மியாத்தி சம்சுடின் மஸ்ஜித் தானா பெர்சாத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மஸ்ஜித் தானா பெர்சாத்து முன்னாள் செயலாளர் ஷாருல் அசார் அமீர், இன்று நடந்த  கூட்டத்தின் போது மாஸ் எர்மியாத்தி தனது ராஜினாமாவை அளித்ததாக கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பல கிளைத் தலைவர்கள், பிரிவுக் குழு உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமாவைச் சமர்ப்பித்ததாக ஷாருல் கூறினார்,

வனிதா பெர்சத்து தலைவரான மாஸ் எர்மியாத்தி  இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். பிப்ரவரி 14 அன்று கோலாலம்பூரில் முன்னாள் பெர்சாத்து துணைத் தலைவர் ஹம்சா ஜைனுடின் நடத்திய ஒற்றுமைப் பேரணியில் கலந்து கொண்ட பெர்சாத்து எம்.பி.க்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *