டிரம்பிற்கு எதிராக வெடித்த மாபெரும் போராட்டம்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியேற்றம், கல்வி மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள், லண்டன் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த இந்த போராட்டத்தில் பல நூறு பேர் திரண்டனர். டிரம்ப் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதாகச் சொல்லி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அதிபராகப் பதவியேற்றது முதல் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வெளிநாட்டினருக்கு எதிரான குடியேற்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். முதலில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுத்த டிரம்ப், பின்னர் சட்டப்பூர்வமாக நுழைந்தோருக்கு எதிராகவும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார்.

அதோடு மட்டுமின்றி, பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை, பல்கலைக்கழக நிதியை முடக்குவது, பல மாகாணங்களில் ராணுவத்தைக் களமிறக்குவது எனத் தொடர்ந்து சர்ச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அவரது நிர்வாகத்தின் நடவடிக்கைகள், சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தும் வகையில் இருப்பதாகப் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்தச் சூழலில் தான் டிரம்பிற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இங்கு யாரும் மன்னர்கள் இல்லை என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. வடக்கு வர்ஜீனியாவில், வாஷிங்டனுக்கு செல்லும் மேம்பாலங்களில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டனர். அமெரிக்க மூத்த எம்பி பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவைப் போலவே லண்டனிலும் கூட இந்த பேரணிகள் நடந்தன. மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவில் இதேபோன்ற லண்டனின் முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே 'நோ கிங்ஸ்' போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்படி உலகம் முழுக்கவே டிரம்பிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்தன. சர்வாதிகார அத்துமீறலுக்கு எதிரான எதிர்ப்பை காட்டவே இந்த போராட்டங்கள் நடைபெறுவதாகத் தெரிவித்தனர்.

அதேநேரம் டிரம்ப் வழக்கம் போல இந்த போராட்டங்களை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. இந்த போராட்டங்கள் அர்த்தமற்றது என்று அவர் தெரிவித்தார். அவர்கள் தன்னை ஒரு மன்னராகக் குறிப்பிடுகிறார்கள் என கூறிய டிரம்ப், தான் மன்னர் இல்லை என்றும் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் தெரிவித்தார். மேலும், அமெரிக்க நலன்களை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

வரம்பின் குடியரசுக் கட்சித் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களை விமர்சித்தனர்.. அமெரிக்காவை வெறுக்கும் நபர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு பேரணிகளை நடத்துவதாகச் சபாநாயகர் மைக் ஜான்சன் சாடியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் படுகொலை செய்யப்பட்டதை மேற்கோள் காட்டிய டிரம்ப் ஆதரவாளர்கள், இத்தகைய இயக்கங்கள் அமைதியின்மையைத் தூண்டும் என்று எச்சரித்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *