கெரிக்கில் கோர விபத்து! 15 மாணவர்கள் பலி

top-news
FREE WEBSITE AD

கெரிக், ஜூன் 9: இன்று அதிகாலை, கெரிக்கின் தாசிக் பண்டிங் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் உப்சி பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், பெரோடுவா அல்சா வாகனமும் மோதிய கோர விபத்தில் குறைந்தது 15 பேர் பலியாகியிருப்பதாக நம்பப்படுகிறது.

அதிகாலை 1.10 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

கெரிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் மூன்று பணியாளர்கள் அடங்கிய மீட்புக் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, அதிகாலை 2.11 மணிக்கு வந்து சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாசிக் பண்டிங் அருகே உள்ள கெரிக்-ஜெலி கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் இந்த மோதல் நிகழ்ந்தது. திரெங்கானுவின் ஜெர்டேவிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அதிகாலை 1.10 மணிக்கு கெரிக் மருத்துவமனையிலிருந்து இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக ஹுலு பேராக் சிவில் பாதுகாப்புப் படை செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்தவுடன், பெரோடுவா அல்சா எம்பிவி மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மொத்தம் 48 பேர் பயணித்த நிலையில் லவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், விபத்தில் சிக்கிய மாணவர்களுக்காக பிரார்த்தனை செய்து UPSI தரப்பு முகநூலில் செய்தி பகிரப்பட்டுள்ளது!

Satu kemalangan ngeri berlaku di Gerik, berdekatan Tasik Banding melibatkan sebuah bas membawa pelajar UPSI dan sebuah Perodua Alza. Kejadian pada awal pagi itu meragut 15 nyawa dan mencederakan empat orang. Operasi menyelamat masih dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *