குவா முசாங் - கோல கிராய் சாலையில் கோர விபத்து! - மூவர் பலி
- Shan Siva
- 14 Jan, 2026
கிளந்தான், ஜன 14: குவா முசாங் – கோலா கிராய் சாலையில் கம்போங் பாலோ அருகே நேற்று பிற்பகல் இரண்டு வாகனங்கள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கடுமையாக காயமடைந்தனர்.
இந்த விபத்தில் நிசான் செரீனா வாகனத்தில் பயணித்த நான்கு ஆண்களும், மேலும் டொயோட்டா ஹையாஸ் வாகனத்தில் பயணித்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருந்ததாக குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு தளபதி செ ரஸாக் ஹாரூன் கூறினார்.
இந்த விபத்து குறித்து மதியம் 1.01 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தது. அதன் பின்னர் குவா முஸாங் தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மீட்பு குழு மதியம் 1.43 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்தபோது, மொத்தம் ஆறு பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். நிசான் செரீனா வாகனத்தில் இருந்த மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்திற்குள் சிக்கிய நிலையில் கடுமையாக காயமுற்றிருந்தார் என அவர் கூறினார்.
மேலும், டொயோட்டா ஹையாஸ் வாகனத்தில் பயணித்த ஆண் மற்றும் பெண் இருவரும் கடுமையாக காயமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக குவா முஸாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



