தூக்கிலிருந்து தப்பினார் தட்சிணாமூர்த்தி! சிங்கப்பூரில் இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது!
- Shan Siva
- 25 Sep, 2025
கோலாலம்பூர், செப் 25: சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறையில் இன்று காலை மலேசியரான கே. தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதியின் குடும்பத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் என்.
சுரேந்திரன், நள்ளிரவுக்குப்
பிறகு சிறையிலிருந்து இந்த விஷயத்தைத் தெரிவித்து ஒரு அழைப்பு வந்ததாகக் கூறினார்.
இந்த நேரத்தில் தங்களுக்கு வேறு எந்த தகவலும் இல்லை. சிறந்த முடிவுக்காக
நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்என்று அவர் எஃப்எம்டியிடம் தெரிவித்துள்ளார்.
44.96 கிராம் டயமார்பைனை சிங்கப்பூருக்குக்
கடத்தியதற்காக தட்சிணாமூர்த்தி இன்று தூக்கிலிடப்படவிருந்தார்.
அவர் 2011 இல் கைது செய்யப்பட்டு 2015 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார். 2022 இல் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அவரது மரண தண்டனை தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு எதிரான சட்ட வழக்கு நிலுவையில் இருந்ததால், மரணதண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



