துணி ஹேங்கரால் மகனை அடித்த தந்தை கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 21: இன்று பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனது மகனை துணி மாட்டும் ஹேங்கரால் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொழிலாளிக்கு எதிராக மூன்று நாள் காவலில் வைக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.

நேற்று மதியம் தனது சைக்கிளில் சென்ற எட்டு வயது சிறுவன், அவர்களது வீட்டின் வாசலில் மோதியதால், 41 வயது சந்தேக நபர் கோபமடைந்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த நபர் துணி ஹேங்கரை எடுத்து சிறுவனை தாக்கியதாகக் கூறப்படுகிறது, இதனால் அச்சிறுவனின் கைகள், கால்கள் மற்றும் இடுப்பு உட்பட உடலின் பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில் அச்சிறுவன் தனது 16 வயது சகோதரியின் அறைக்கு ஓடியதாகவும், அதனை அடுத்து  அந்த இளம்பெண் நேற்று இரவு யோங் பெங் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Seorang lelaki berusia 41 tahun direman tiga hari kerana disyaki memukul anaknya dengan penyangkut baju selepas kanak-kanak itu melanggar pintu rumah menggunakan basikal. Mangsa mengalami kecederaan di beberapa bahagian badan, dan kejadian dilaporkan oleh kakaknya di balai polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *