16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 21: இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது பதின்ம வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 38 வயது தொழிலாளி ஒருவர் மீது கோத்தா பாரு அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோத்தாபாருவில் உள்ள ஜாலான் பாசிர் மாஸ்-சலூரில் மார்ச் 31 அன்று அதிகாலை 4 மணியளவில் தனது 16 வயது மகளை காரில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(3) இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் எட்டு முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 10 பிரம்படிகள் கிடைக்க இச்சட்டம் வகை செய்கிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *