டுரியான் தோலால் அடித்து மகள் சித்திரவதை-தந்தைக்கு 5ஆண்டுகள் சிறை தாய்க்கு வெ.18,000 அபராதம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 25-

தங்களின் மகளை டுரியான் தோலால் அடித்துச் சித்திரவதை செய்த தந்தைக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் தாய்க்கு பதினெட்டாயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. அக்குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர்களுக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அத்தண்டனையை விதித்தது.

புன்ஞாமின் சுக்கிமான் (வயது 42) எனும் அந்நபர் இம்மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அத்தண்டனை நடப்புக்கு வருகிறது என்று நீதிபதி முகமது ஸாக்கி முகமது சாலே தெரிவித்தார். அதே வேளையில், அவருடைய மனைவி யோர்லினி அப்துல்லா உமருக்கு (வயது 32) பதினெட்டாயிரம் வெள்ளி அபராதம் விதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மூன்று மாதச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்தார்.

யோர்லினி எனும் அம்மாது ஏழு வயதுடைய தனது குழந்தையின் சொந்த தாய் ஆவார். ஆனால், புன்ஞாமின் அக்குழந்தையின் வளர்ப்புத் தந்தை ஆவார். கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள தங்களின் இல்லத்தில் இம்மாதம் 16ஆம் தேதி மாலை ஆறு மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

அச்சிறுமி தனது சக மாணவியின் தலையங்கியை கத்தியால் வெட்டிக் கிழித்தாகக் கூறப்படுகிறது. இதனால், சினமடைந்த பெற்றோர்கள் அவளைக் கடுமையாக அடித்துள்ளனர். அவ்வேளையில், புன்ஞாமின் அச்சிறுமியின் கையை டுரியான் தோலால் அடித்துள்ளார். இதனால், டுரியான் முள்குத்தி அவளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *