நேற்று முதல் அமலுக்கு வரும் தேசிய ஊதிய ஆலோசனை மன்றச் சட்டம்!
- Muthu Kumar
- 02 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 2-
2025ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட தேசிய ஊதிய ஆலோசனை மன்றச் சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப ஒப்பந்தப் பயிற்சித் தொழிலாளர்களுக்கும் தற்போதைய இந்த குறைந்தபட்ச ஊதிய அமலாக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஐந்துக்கும் குறைவான தொழிலாளர்களைப் பணியமர்த்திய 2020ஆம் ஆண்டு மாஸ்கோ எனப்படும் மலேசிய தொழில் வகைப்பாடு தரநிலைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தொழில்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத முதலாளிகளும். மாதத்திற்கு குறைந்தபட்ச ஊதிய விகிதமாக 1,700 ரிங்கிட்டை வழங்குவதற்கான 2024ஆம் ஆண்டு குறைந்தபட்ச உத்தரவு, இவ்வாண்டு ஆகஸ்ட் முதலாம் தேதி முதல் நடைமுறைப்படுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபகற்ப மலேசிய மனிதவளத் துறை, ஜே.டி.கே.எஸ்.எம். சபா மனிதவளத் துறை. சரவாக் மனிதவளத் துறை, ஆகியவை அமல்படுத்தும், குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான சட்டங்களுக்கு முதலாளிகள் இணங்குமாறு, மனிதவள அமைச்சு, நேற்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியது.
குறைந்தபட்ச ஊதியத்தை செலுத்தத் தவறும் முதலாளிகள், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓர் ஊழியருக்கு தலா 10,000 ரிங்கிட்டுக்கும் மேல் அபராதம் விதிக்கப்படலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



