தேசியக் கொடி விவகாரம் - பொதுமக்கள் தங்கள் கைகளில் எடுத்துகொள்ளக்கூடாது! - AGC எச்சரிக்கை
- Shan Siva
- 15 Aug, 2025
புத்ராஜெயா, ஆக 15:
தேசியக் கொடி தொடர்பான நெறிமுறை மீறல்கள் ஏற்பட்டால், பொது மக்கள் தாங்களாகவே அந்த விவகாரத்தைக் எடுத்துக்கொள்ள
வேண்டாம் என்று சட்டத்துறை அஅலுவலகம் நினைவூட்டியுள்ளது.
பினாங்கின் கப்பளா
பத்தாஸில் உள்ள ஒரு கடையிலும், நெகிரி
செம்பிலானின் போர்ட் டிக்சனில் உள்ள ஒரு பள்ளியிலும் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட
சம்பவங்களை சட்டத்துறை அலுவலகம் மேற்கோள்
காட்டியது.
இதுபோன்ற
சம்பவங்கள் குறித்த அனைத்து புகார்கள் அல்லது தகவல்களும் நடவடிக்கைக்காக
பொருத்தமான அதிகாரிகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று AGC வலியுறுத்தியது.
இதுபோன்ற
செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் எவருக்கும் எதிராக வழக்குகளை தங்கள்
கைகளில் எடுக்க வேண்டாம் என்று சட்டத்துறை அலுவலகம் பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய
தரப்பினரின் வளாகத்தை சோதனை செய்தல், தனிப்பட்ட தகவல்களை பரப்புதல் அல்லது சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற
குற்றச்சாட்டுகளை சுமத்துதல், சம்பந்தப்பட்ட
தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக ஆத்திரமூட்டலைத் தூண்டுதல் அல்லது
அச்சுறுத்தல்களை வெளியிடுதல் ஆகியவை இதில் அடங்கும் என்றுகு றிப்பிடப்பட்டுள்ளது.
தேசியக் கொடியை தனது
வளாகத்திற்கு வெளியே தலைகீழாக தொங்கவிட்டதற்காக கடையின் உரிமையாளர் மீது விசாரணை
நடத்தப்பட்டதை அடுத்து, அம்னோ இளைஞர்
தலைவர் டாக்டர் அக்மல் சலே தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் நேற்று பினாங்கின் கப்பளா
பத்தாஸில் கூடியதை அடுத்து சட்டத்துறை அலுவலகம் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



