பத்துகேவ்ஸ் கடையில் தலைகீழாக கட்டப்பட்ட தேசியக் கொடி!
- Muthu Kumar
- 28 Aug, 2025
பத்துகேவ்ஸ், ஆக. 28-
சிலாங்கூரின் பத்துகேவ்ஸ் பகுதியில் கடை வீடொன்றில் தேசியக் கொடி தலைகீழாகக் கட்டப்பட்டிருந்தது. அக்கட்டடத்தின் முதல் மாடியில் கட்டப்பட்ட அக்கொடி தீயணைப்பு வீரர்களால் பின்னர் அகற்றப்பட்டது.
அச்சம்பவம் பற்றி சனிக்கிழமை காலை 10.20மணிக்குத் தங்களுக்குத் தொலைபேசி அழைப்பு கிடைத்தது. அது காலணிகள் விற்கும் கடையாகும் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நேற்று தெரிவித்தது.
அங்கிருந்து அகற்றப்பட்ட கொடி போலீஸ்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற அறிக்கையொன்றின்வழி கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



