சபா தேர்தலில் தேசிய முன்னணி 81 சதவீத புதிய முகங்களை நிறுத்துகிறது!
- Muthu Kumar
- 16 Oct, 2025
கோத்தா கினபாலு.அக். 16-
சபா மாநில தேர்தலில் தேசிய முன்னணி 81 சதவீத புதிய முகங்களை நிறுத்துகிறது என சபா தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ பூங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.சபா மாநிலத்திம் 17ஆவது தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் 50 சதவீத இளைஞர்கள் உட்பட 81 சதவீத புதிய முக வேட்பாளர்களை
தேசிய முன்னணி நிறுத்துகிறது.மேலும் தேசிய முன்னணி 48 இடங்களை இலக்காகக் கொண்டுள்ளது.இந்த இடங்களில் அம்னோ, மசீச. பிபிஆர்எஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடும்.மீதமுள்ளவை நம்பிக்கை கூட்டணியில் இடம் பெற்றுள்ளன என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



