தண்ணீரில் தேசம்; தவிக்கும் மக்கள்! 22,504 பேர் வெளியேற்றம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 26: தேசிய பேரிடர் கட்டளை மையம் (NDCC) நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, எட்டு மாநிலங்களில் மொத்தம் 22,504 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இருபத்தி நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, 129 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

கிளந்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. நான்கு மாவட்டங்களில் 3,530 குடும்பங்களைச் சேர்ந்த 9,564 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 40 நிவாரண மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இதைத் தொடர்ந்து பெர்லிஸில் 17 மையங்களில் 5,235 பேர் (1,557 குடும்பங்கள்) உள்ளனர்; பேராக்கில் ஏழு நிவாரண மையங்களில் 982 குடும்பங்களைச் சேர்ந்த 3,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; சிலாங்கூரில் ஏழு மையங்களில் 775 குடும்பங்களைச் சேர்ந்த 2,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கெடாவில், 543 குடும்பங்களைச் சேர்ந்த 1,629 பேர் 11 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். அதே நேரத்தில் பினாங்கில் ஒரு மையத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பகாங்கில் இரண்டு மையங்களில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், திரெங்கானுவில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் ஒரு நிவாரண மையத்தில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *