மெட்ரிகுலேஷன் கல்விமுறையினால் தலைசிறந்த மாணவர்கள் பாதிப்பு!
- Muthu Kumar
- 05 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 5-
தற்போதைய மெட்ரிகுலேஷன் கல்விமுறையினால் தலைசிறந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் நேற்று தெரிவித்தார்.
இவ்வாரம் மலாக்கா. செயிண்ட் டேவிட் தேசிய உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹியூ காய் ஸுவான் மற்றும் வாங் யூ ஸே ஆகிய இரண்டு மாணவர்கள் என்னிடம் மனமுடைந்த நிலையில் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்கள் இருவரும் 9ஏ பிளஸ் மதிப்பெண்களுடனும் முறையே 98.99 மற்றும் 99.14 புள்ளிகளுடனும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால், மெட்ரிகுலேஷன் படிப்புக்காக அவர்கள் செய்த விண்ணப்பம் இரண்டு முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் வீ கா சியோங் சொன்னார்.
அவ்விரு மாணவர்களும் பள்ளியில் தலைமைத்துவப் பங்களிப்பைச் செய்துள்ளனர். மாநில நிலையில் பல்வேறு நிலைகளில் புறப்பாட நடவடிக்கைகளிலும் அவர்கள் தீவிரமாகப் பங்கு கொண்டுள்ளனர். புத்தாக்கத்திற்காக ஐடெக்ஸ் தங்கப் பதக்கங்களையும் அவர்கள் வென்றுள்ளனர். அவர்களின் அறிவுத்திறனையும் நற்பண்புகளையும் இது பிரதிபலிக்கிறது என்று தமது முகநூல் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் மேல்முறையீடுகள் கல்வித் துணையமைச்சர் வோங் கா வோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அவரிடமிருந்து எந்த மறுமொழியும் இதுவரை கிடைக்கவில்லை என்றார். மெட்ரிகுலேஷன் படிப்புக்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுள் 86 விழுக்காட்டினர் ஒன்பது பாடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்திருந்தனர் என்பதை கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் உறுதிப்படுத்தினார்.
மெட்ரிகுலேஷன் விண்ணப்பதாரர்களில் பதினான்கு விழுக்காட்டினர் மட்டுமே பத்து பாடங்களை தேர்வுக்கு எடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறியிருக்கின்றார். அவ்வாறெனில், ஒன்பது பாடங்களை மட்டுமே தேர்வுக்கு எடுத்துத் தலைசிறந்த முறையில் தேர்ச்சிபெற்ற மாணவர்களின் நிலை என்ன என்பதை ஃபட்லினா தெளிவுபடுத்துவாரா என்றும் அவர் டாக்டர் வீ கா சியோங் வினவினார்.
Ketua MCA, Dr. Wee Ka Siong, kesal pelajar cemerlang ditolak permohonan matrikulasi walaupun meraih 9A+ dan aktif kokurikulum. Beliau gesa penjelasan Menteri Pendidikan, Fadhlina Sidek, mengenai keutamaan pemilihan pelajar dalam sistem matrikulasi sedia ada.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



