டாக்காவிற்கு டத்தோஸ்ரீ அன்வார் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணம் மன உறுதியை அளித்தது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 15-

கடந்த ஆண்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டாக்காவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணம் அரசியல் குழப்பத்திலிருந்து மீண்டு வந்த அந்நாட்டிற்குத் தேவையான மன உறுதியை அளித்தது.டத்தோஸ்ரீ அன்வாரின் வருகை மிகவும் சவாலான அக்காலகட்டத்தில் அந்நாட்டிற்கு நம்பிக்கையையும் அளித்ததாக, வங்காளதேச அரசாங்கத் தலைமை ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் முஹமட் யூனுஸ் கூறினார்.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமையேற்றிருக்கும், டாக்டர் முஹமட் யூனுஸ், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்த இளைஞர்கள் தலைமையிலான போராட்டத்தைத் தொடர்ந்து, வங்காளதேசம் எதிர்கொண்ட நிச்சயமற்ற காலகட்டத்தையும் நினைவு கூர்ந்தார்.

அச்சூழலை, 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது போன்று ஒப்பிட்ட அவர், அதனால் போழிவு ஏற்பட்டு அந்நாடே செயலிழந்து போனதோடு, எங்கும் கோப அலைகளே பரவியதாகவும் சித்தரித்தார்.

"அந்த சீர்குலைவை சீரமைப்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. சீரமைப்பது மட்டுமல்ல,அதை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான வழி, இடம், எங்கிருந்து தொடர வேண்டும் என்பதைக் கண்டறிய வேண்டும். அதை எப்படிச் செய்வது என்று கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, நமக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. மலேசிய பிரதமர் எங்களைச் சந்திக்க வருகிறார்"என்றார் அவர்.

கடந்த ஆண்டில், நாட்டை மீண்டும் ஒழுங்கமைக்க யூனுஸ் தலைமையிலான நிர்வாகம் உருவாக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர், குறிப்பிடத்தக்க பயணத்தை மேற்கொண்ட முதல் வெளிநாட்டுத் தலைவர் அன்வார் ஆவார்.

"அவர் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். அவரது வருகை மக்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. வங்காளதேசத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் மலேசியாவைத் தெரியும். ஏனென்றால், அங்கு ஏராளமான வங்காளதேசத்தினர் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்கள் இங்கே உள்ளன. இது தெரியாத நாடு அல்ல. மலேசியப் பிரதமர் "ஆம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று கூறியது வங்காளதேச மக்களுக்கு நிறைய அர்த்தத்தை அளித்தது. எனவே, அவர் வந்தபோது மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் உற்சாகமூட்டும் ஒருவராக இருந்தார்", என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *