2026 சனி பெயர்ச்சி - 4 ராசிகளுக்கு கஷ்ட காலம் ஆரம்பம்!

top-news
FREE WEBSITE AD

2026-ஆம் ஆண்டு நிகழவிருக்கும் சனி பெயர்ச்சியையொட்டி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய காலக்கட்டம் உருவாகியுள்ளது.

குறிப்பாக, 2026 மார்ச் 13 முதல் ஏப்ரல் 22 வரையிலான காலத்தில் சனி பகவான் அஸ்தமன நிலையில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த கிரக நிலைக் மாற்றமானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், மேஷம், துலாம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு இது சவாலான காலக்கட்டமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேஷ ராசியினரைப் பொறுத்தவரை, நிதி விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது. அவசரப்பட்டு எடுக்கப்படும் முதலீட்டு முடிவுகள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், துலாம் ராசிக்காரர்களுக்குச் செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் சேமிப்பில் கவனம் செலுத்துவதோடு, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தச் சனிப் பெயர்ச்சி காலத்தில் சொத்து தொடர்பான பிரச்சனைகளும், குடும்பத்தில் நிதி சார்ந்த கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற கோபம் மற்றும் அகந்தையைத் தவிர்த்துப் பணிவுடன் நடந்து கொள்வது இவர்களுக்கு நற்பலனைத் தரும். மகர ராசியினருக்கும் திடீர் பண இழப்புகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். முன்னதாக லாபம் தந்த முதலீடுகள் கூட நஷ்டத்தைத் தர வாய்ப்புள்ளதால், எதிலும் நிதானமாகச் செயல்படுவது அவசியம்.

பொதுவாக, இந்தக் கஷ்ட காலங்களில் இருந்து விடுபடவும் சனியின் தாக்கத்தைக் குறைக்கவும் முறையான வழிபாடுகள் அவசியம். பாதிக்கப்பட்ட ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதும் நலம் பயக்கும். அனுமன் வழிபாடு மற்றும் சுந்தர காண்டம் பாராயணம் செய்வது மன வலிமையைத் தந்து சவால்களை எதிர்கொள்ள உதவும் என ஆன்மீக ரீதியாக அறிவுறுத்தப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *