நிதி அமைச்சில் ஊழலா? அரசு வாகனங்கள் ஒப்பந்தத்தில் குளறுபடி! – கணக்காய்வாளர் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 6,

அரசு வாகனங்கள் பராமரிப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாகத் தேசிய கணக்காய்வாளரான Datuk Mas Ermieyati Samsudin குற்றம்சாட்டினார்.  இந்த ஒப்பந்தம் நிதி அமைச்சிற்கும் வாகனத் தொழில் நிறுவனமான SPANCO Sdn Bhd நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்றும் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டிருக்கும் நிறுவனத்தின் மீது நிதி அமைச்சு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் இதனால் நிதி அமைச்சிற்குப் பெரிய அளவிலான நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதால் நிதி அமைச்சின் அதிகாரிகளைத் தேசிய கணக்காய்வுக் குழு விசாரித்து வருவதாகவும் Datuk Mas Ermieyati Samsudin தெரிவித்தார்.

SPANCO நிறுவனத்தின் மூலமாக 6,028 அரசு வாகனங்கள் தாமதமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்த வாகனங்களைத் தாமதமாக அனுப்பியதற்கான எந்தவோர் அறிக்கைகளையும் அரசு சமர்பிக்கவில்லை என்றும் தேசிய கணக்காய்வுக் குழுத் தலைவரான Datuk Mas Ermieyati Samsudin தெரிவித்தார். மேலும் இந்த அரசு வாகனங்கள் முக்கிய அமைச்சுகளில் பயன்படுத்தவிருந்ததாகவும் குறிப்பாகச் சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, உள்துறை அமைச்சு என Datuk Mas Ermieyati Samsudin குறிப்பிட்டார். அரசு தரப்பிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வழக்குகளில் இந்த 6,028 அரசு வாகனங்கள் தாமதமாக வழங்கப்பட்டது குறித்து எந்தவொரு விளக்கமும் இல்லை என்பதால் நிதி மோசடிகள் நிகழ்ந்திருப்பதற்கானச் சந்தேகத்தை எழுப்பியிருப்பதாகத் தேசிய கணக்காய்வுக் குழுத் தலைவரான Datuk Mas Ermieyati Samsudin தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *