லீ ஸீ ஜியாவின் வருகை சாதகமான அறிகுறி: கெனத் ஜோனாசன்
- Tamil Malar (Reporter)
- 23 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 23-
நாட்டின் ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பயிற்சி இயக்குநர் கெனத் ஜோனாசன், தொழில்முறை வீரர் லீ ஸீ ஜியா அனைத்துலக போட்டிகளில் மீண்டும் களமிறங்கியிருப்பதை ஒரு மிகச் சாதகமான முன்னேற்றமாக வர்ணித்துள்ளார். இது, வரும் ஏப்ரலில் டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நகரில் நடைபெறவுள்ள தாமஸ் கோப்பையை முன்னிட்டு, சிறந்த தேசிய அணியை அமைப்பதற்கு பயிற்சியாளர்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்துலக போட்டிகளுக்கு ஸீ ஜியா திரும்பியிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய ஜோனாசன், பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அந்த வீரரை ‘ஒரு நட்சத்திரம்’ என புகழ்ந்தார். அவர் அணியின் பலத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், பேட்மிண்டன் விளையாட்டிற்கு தனித்துவமான ஆற்றல், மதிப்பையும் கொண்டு வருகிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒரு ரசிகராக, அவர் மீண்டும் களத்திற்கு வந்திருப்பதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.,” என்று ஜோனாசன் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



