அனைத்து மாநிலத்திலும் AUTISME பாலர்பள்ளி! துணைப் பிரதமர் ZAHID HAMIDI உறுதி!
- Thinagaren Sanggaren
- 31 Oct, 2025
அக்தோபர் 31,
AUTISME குழந்தைகளுக்கான சிறப்பு வழிகாட்டலை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களில் சிறப்புப் பாலர்பள்ளி அமைக்கப்படும் என துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi நம்பிக்கை தெரிவித்தார். தற்போது இயங்கி வரும் KEMAS பாலர் பள்ளியை விரிவுப்படுத்தும் ஒரு திட்டமாக இது அமையும் என்றும் வறுமையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் படிக்கும்படியாக இந்த சிறப்புப் பாலர்பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi உறுதியளித்தார்.
ஆட்டிசம் உள்ள குழந்தைகளைப் பாதுகாப்பதில் பாலர்பள்ளிகள் அதிகமான கட்டணத்தை வசூலிக்கும் நிலை தற்போது மேலோங்கி இருப்பதால் ஒரு சில தனியார் பாலர்பள்ளிகள் இப்படியாக வசூலிப்பது குடும்பத்திற்கு நிதி சுமையை ஏற்படுத்துவதாகவும் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். குடும்பத்தின் நிதி சுமையைக் கட்டுப்படுத்த ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கான இந்த பாலர் பள்ளித் திட்டம் அடுத்த ஆண்டுக்குள் மாநிலத்தில் 1 என முதற்கட்டமாகச் செயல்பாட்டுக்கு வரும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



