நவீன் படுகொலை வழக்கு-நவம்பருக்கு ஒத்திவைப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜோர்ஜ் டவுன், ஜூலை 9-

பதின்ம வயதினரான டி. நவீன் படுகொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு நபர்கள் மீதான விசாரணை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. அந்நபர்களின் தற்காப்பு வாதம் நவம்பர் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை செவிமடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இந்த விசாரணை நேற்று முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருந்தது.

ஆயினும், அவ்வழக்கிலிருந்து ஐந்தாவது நபரான எஸ்.கோபிநாத் (வயது 34) என்பவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு சமர்ப்பித்துள்ள மேல்முறையீடு குறித்து கூட்டரசு நீதிமன்றம் இன்னும் தீர்ப்பளிக்காமல் உள்ளது என்று துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் யாஸிட் முஸ்தாகிம் ரோஸ்லான் நீதிமன்றத்திடம் நேற்று தெரிவித்தார்.

இதனால், கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரையில் நவீனின் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை நவம்பர் மாதத்திற்குத் தள்ளிவைக்க உயர்நீதிமன்ற நீதிபதி ராட்ஸி அப்துல் ஹமீட் இசைவு தெரிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதியன்று பினாங்கின் புக்கிட் குளுகோரில் உள்ள பூங்காவொன்றில் பதினெட்டு வயதான நவீனைக் கொலை செய்ததாக ஜெ.ராஜசுதன், எஸ். கோகுலன் மற்றும் வயது குறைந்த மேலும் இரண்டு நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்நால்வரையும் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகத் தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்நால்வரையும் தற்காப்பு வாதம் செய்யும்படி உத்தரவிட்டது.

அவ்வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கிடைக்கப் பெற்ற புதிய ஆதாரங்களின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் கோபிநாத் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அவரையும் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. கோபிநாத்தின் விடுதலையை மேல்முறையீட்டு நீதிமன்றம்' நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து, அதனை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்திடம் பிராசிகியூஷன் மேல்முறையீடு செய்துள்ளது.

Kes pembunuhan remaja T. Naveen ditangguhkan kerana Mahkamah Persekutuan belum putuskan rayuan terhadap pembebasan tertuduh kelima, S. Gobinath. Perbicaraan untuk empat tertuduh lain dijadualkan semula pada 17 hingga 21 November 2025. Kes ini membabitkan pembunuhan pada tahun 2017.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *