காஸா & பாலஸ்தீனத்தைக் காப்பாற்ற வேண்டியது மிக முக்கியமானது! - துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி
- Shan Siva
- 09 Oct, 2025
ஷா
ஆலம், அக் 9: இஸ்ரேல் காசா போர் நிறுத்த
திட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், ஹமாஸ் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் உடன்பட்டதைத் தொடர்ந்து, அதன் தாக்குதல்களை நிறுத்தி, மனிதாபிமான உதவிகளை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் துணைப் பிரதமர்
டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
இந்த
ஒப்பந்தத்திற்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு முன்பு ஹமாஸ் பல
பிரச்சினைகள் குறித்து மேலும் மதிப்பாய்வு செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மோதலின்
விளைவாக எழுந்துள்ள போர், அடக்குமுறை, பஞ்சம் மற்றும் நோய்களால் ஏற்படும் இறப்புகள் உடனடியாக
நிறுத்தப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் வலியுறுத்தினார். காசா மற்றும்
பாலஸ்தீனத்தைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மாரா தொழில்நுட்ப
பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான கான்வென்சியன் 152 இன் நிறைவு விழாவை நடத்திய
பின்னர்,
அஹ்மத் ஜாஹித் செய்தியாளர்களிடம் இந்தக் கருத்துக்களைத்
தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



