மகள் பாலியல் துன்பறுத்தல்! தந்தை கைது! தாய் காணவில்லை!
- THINAGAREN SANGGAREN
- 05 Jul, 2026
ஜூலை 5,
13 வயது மகளை 41 வயது தந்தை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் கடந்த ஜூன் 18, பாசீர் பூத்தேவில் உள்ள வீட்டில் அதிகாலை 4.30 மணிக்கு 13 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் சுதாரித்த 13 வயது சிறுமி, அங்கிருந்து தப்பித்து பினாங்கில் உள்ள மாமா வீட்டில் தஞ்சம் அடைந்தததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி வளர்ப்பு மகள் என்றும் கடந்த 1 மாதமாக அவருடைய தாய் காணவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர், கைது செய்யப்பட்ட 41 வயது ஆடவரைக் காவல்துறையின் கடுங்காவலில் வைக்கும்படியும் மேலதிக விசாரணையைக் காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் KOTA BAHRU அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காணாமல் போனதாக நம்பப்படும் சிறுமியின் தாயைத் தேடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



