சித்திரைத் திருநாளில் எல்லாம் மென்மேலும் சிறக்கட்டும்! ஓம்ஸ் பா.தியாகராஜன்
- Shan Siva
- 14 Apr, 2026
கிள்ளான், ஏப் 14: மலர்ந்திருக்கும் இந்த சித்திரை திருநாளில் தேசத்தின் செழிப்பும் ஒற்றுமையும் மேலோங்கட்டும் என ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா ச்ங்கத்தின் தோற்றுநருமான ஒம்ஸ் பாதியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் தெருவித்துள்ளார்.
உலகம் எதிர்கொண்டிருக்கும் தற்போதைய பொருளாதார சூழலில் மக்களின் வாழ்வு சுபிட்சமாக அமைய வேண்டும் என தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.
சிக்கனமும், சேமிப்பும் இந்தக் காலகட்டத்தில் மிக அவசியம் என்று சுட்டிக்காட்டிய அவர், மகிழ்ச்சியும் ஆரோக்கியமும், வளமும் நிறைந்த சிறப்பான வாழ்வு எல்லாருக்கும் அமைய வேண்டும் என தாம் வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லா வளமும் மிக்க நம் தேசம் மென்மேலும் சிறக்கட்டும் என அவர் வாழ்த்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



