அன்வாருக்கு எதிராக வேதமூர்த்தி தொடர்ந்த வழக்கில் பெரிக்காத்தானுக்கு தொடர்பில்லை! – தக்கியுதீன் ஹசான்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 14: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக வழக்கறிஞர் பி.வேதமூர்த்தி தொடர்ந்த வழக்கில் பெரிகாத்தான் நேஷனல் (பி.என்) சம்பந்தப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைமை கொறடா தக்கியுதீன் ஹசான் இன்று தெரிவித்தார்.

மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவர் வேதமூர்த்தியால் இந்த வழக்கு தனிப்பட்ட முறையில் தொடரப்பட்டது என்று அவர் கூறினார்.

மலேசியராக இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதற்கான அவரது உரிமையை மதிக்கிறோம். நீதிமன்றங்கள் இந்த விஷயத்தை முடிவு செய்யட்டும் என்று அவர் மக்களவையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பக்காத்தான் ஹரப்பான் (PH) எம்.பி. சியாரெட்ஸான் ஜோஹன், வேதா தாக்கல் செய்த வழக்கு பெர்சாத்து தலைவர்களுடனான அவரது அண்மைய சந்திப்புடன் தொடர்புடையதா என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *