நல்லிணக்கத்தில் செழித்தோங்கட்டும் தேசம்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், டிச 25: பல்லின மக்கள், பல்வேறு கலாச்சாரம், வித விதமான மொழிகள், வகை வகையான உணவு வகைகள், செழித்துக் கிடக்கும் இயற்கையின் அதிசயங்கள், எல்லாவற்றுக்கும் மேல் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும்நல்லிணக்கம் என இவைதான் உலகம் நம் மலேசியாவைக் கொண்டாட காரணிகளாக இருக்கின்றன.

நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் பல்வேறு மக்களின் பண்டிகைகள் நம் தேசத்தை மேலும் மெருகூட்டுகின்றன.

அந்த வகையில் கிறிஸ்துவப் பெருமக்களின் உன்னத திருநாளான இந்தக் கிறிஸ்துமஸ் நன்னாள் நம் தேசத்தின் கோலாகல விழவாக இன்று கொண்டாடப்படுவதில் தாம் மகிழ்வதாகவும், பல்லின உறவுகளும் அதில் பங்கேற்றுமகிழ்வதில் தாம் பெருமைகொள்வதாகவும் ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா. தியாகராஜன் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவரின் புரிதலில்செழித்தோங்கும் இந்த தேசம் மென்மேலும் சிறந்த விளங்கவும், மக்களின் தேவைகள் நிறைவேறி ம்கிழ்ச்சிபெருகவும் தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என்றும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *