ஒற்றுமையும், புரிந்துணர்வும் தேசத்தை அழகாக்கட்டும் - ஓம்ஸ் பா.தியாகராஜன்
- Muthu Kumar
- 21 Mar, 2026
கிள்ளான், மார்ச் 21: புனிதமான இந்த ரமலான் திருநாளில் அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும் தனது ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக, ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பல்லினம், பல்வேறு விதமான பண்பாடு, வெவ்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு தேசமாக மலேசியா திகழ்கிறது. வெகு ஜன மக்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் இடையே உள்ள ஒற்றுமையும் புரிந்துணர்வும்தான் இந்த தேசத்தை மென்மேலும் அழகாக்குகிறது.
ஆனாலும் ஒரு சிலரின் தவறான புரிந்துணர்வு, தேவையற்ற தூண்டுதல் இந்த நாட்டின் புனிதத்தைக் கெடுப்பதோடு, மக்கள் மத்தியிலும் தேவையற்ற எண்ணங்களை உருவாக்கி வருகிறது. அதுபோன்ற நிலை தொடராமல் இருக்க, அத்தகையவர்களை அடையாளம் கண்டு மக்கள் தெளிவுபெற எல்லாம் வல்ல இறைவனைத் தாம் வேண்டிக் கொள்வதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
உன்னதமான மார்க்கத்திற்குரியவர்கள் முஸ்லிம் பெருமக்கள். நோன்பு நோற்று இந்தப் பெருநாளை வரவேற்று மகிழ்கிறார்கள். இந்தப் புனித நன்னாளில் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் மென்மேலும் அருளாசிகள் வழங்கட்டும். நாமும் அவர்களோடு சேர்ந்து மகிழ்வோம் என ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



