அசாம் பாக்கியை அன்வார் பாதுகாக்கிறாரா? AZAM BAKI-ஐ இடைநீக்கம் செய்யுங்கள்!
- Thinagaren Sanggaren
- 15 Feb, 2026
பிப்ரவரி 15,
தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் Bloomberg அறிக்கையைச் சதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் வெளிப்படையான விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மூடா கட்சியின் தலைவரும் Puteri Wangsa சட்டமன்ற உறுப்பினருமான Amira Aisya வலியுறுத்தினார். பிரதமர் அன்வாரால் Tan Sri Azam Baki தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். Tan Sri Azam Baki-இன் பதவிக் காலம் நிறைவடைந்தும் அவரின் பதவிக் காலத்தை அன்வார் நீட்டித்தார். இப்போது Tan Sri Azam Bakiக்கு எதிராக அனைத்துலக நிறுவனமான Bloomberg அறிக்கை வெளியிட்டும், Tan Sri Azam Baki-ஐ அன்வார் பாதுகாக்க முயற்சிப்பதாக Amira Aisya குற்றம்சாட்டினார்.
Tan Sri Azam Bakiக்கு எதிராக Bloomberg கடந்த 2022 ஓர் அறிக்கையை வெளியிட்டது, அப்போதே அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவருக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் போராட்டம் நடத்தப்பட்டாலும் அப்போதைய பாரிசான் அரசு கண்டுக்கொள்ளவில்லை. இப்போது மடானி அரசாங்கத்தில் அன்வாரும் அதையே செய்கிறார் என Amira Aisya தெரிவித்தார். Tan Sri Azam Bakiக்கு எதிராக Bloomberg வெளியிட்டிருக்கும் அறிக்கை குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கட்சியின் நிகராளிகளும் அந்த விசாரணைக் குழுவில் இடம்பெற வேண்டும். முதலில் Tan Sri Azam Baki-ஐ அவருடைய தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும். இல்லையேல் விசாரணையில் Tan Sri Azam Baki-இன் தலையீடு இருக்கும் என மூடா கட்சியின் தலைவரும் Puteri Wangsa சட்டமன்ற உறுப்பினருமான Amira Aisya தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



