SPRM அசாம் பாக்கி எதிர்ப்பு பேரணியில் டி.ஏ.பி தலைவர்கள்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 26,

தலைநகரில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் TAN SRI AZAM BAKI-க்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியில் ஆட்சியிலிருக்கு டி.ஏ.பி கட்சியினர் கலந்து கொண்டது கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அரசாங்கத்தில் இருந்த கொண்டு அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக டி.ஏ.பி செயல்படுகிறது என சிலர் வெளியிடும் கருத்துகள் அர்த்தமற்றவை என டி.ஏ.பியின் தலைமை தெரிவித்துள்ளது. 

பணமோசடியில் சம்மந்தப்பட்டிருப்பதாக அசாம் பாக்கி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் அசாம் பாக்கியைக் கைது செய்யாமல் இருப்பதைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில் டி.ஏ.பியின் தலைவர்கள் பங்கேற்றது அசாம் பாக்கியைக் கைது செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல என்றும் மாறாக அரசு துறைகளில் ஏற்பட்ட கலங்கத்தை நீக்க வேண்டும் என்பதற்காக அசாம் பாக்கியைக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்பதில் டி.ஏ.பி உறுதியாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 

டி.ஏ.பி மக்கள் நலனையும் நாட்டின் நலனையும் முன்னேற்றுவதற்கான செயல்பாடில் என்றும் நிலைத்து இருக்கும் என உறுதியளித்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *