விசாரணைக்குப் பின் நடவடிக்கை! AZAM BAKI வழக்கில் அமைச்சரவை முடிவு!
- THINAGAREN SANGGAREN
- 12 Mar, 2026
மார்ச் 12,
மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் TAN SRI AZAM BAKI சம்மந்தப்பட்டுள்ள 8 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அந்நிய முதலீடுகள் குறித்தான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைக்குப் பின்னர் அசாம் பாக்கி மீது அரசு தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் இருப்பதாகவும் அரசாங்கச் செய்தி தொடர்பாளரும் தொடர்புத் துறை அமைச்சருமான Datuk Fahmi Fadzil விளக்கமளித்தார். மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் TAN SRI AZAM BAKI தொடர்பான கேள்விகள் அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்கள் கேள்விகளை எழுப்பியது தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அரசு தலைமை செயலாளர் நடவடிக்கை எடுப்பது சரியான தீர்வாக இருக்கும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதால் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருக்காது என Datuk Fahmi Fadzil உறுதியளித்தார். இது அரசு அதிகாரி சம்மந்தப்பட்டது என்பதால் தலைமை செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar நடவடிக்கை எடுப்பது தான் பொருத்தமாக இருக்கும் என Datuk Fahmi Fadzil தெரிவித்தார். ஆட்சியில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்வது நியாயமாக இருக்காது. சட்டமும் விசாரணையும் ஒருவரைக் குற்றவாளி என நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கப்பட்டால் அவர் மீது அரசு தலைமை செயலாளர் நடவடிக்கை எடுப்பார் என Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



