இஸ்ரேலிய மொழியில் மலேசிய வாகனம்! காவல்துறை விசாரணை!
- Thinagaren Sanggaren
- 08 Oct, 2025
அக்தோபர் 8,
சாலையில் இஸ்ரேலிய மொழியான HEBREW மொழி எழுத்துகள் அச்சிடப்பட்ட வாகனம் செல்லும்படியான காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து காவல்துறையினர் சம்மந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரிடம் விசாரணையை மேற்கொள்வதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். இஸ்ரேலின் HEBREW மொழியில் “மலேசியா எங்கள் கைகளில்” எனும் பொருளில் அச்சிடப்பட்டிருந்தது.
சமூகவலைத்தலத்தில் பரவிய காணொலிக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட வாகனம் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவரின் முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தின் உரிமையாளர் குறித்தான தகவல்களைக் காவல்துறையினர் திரட்டி வருவதாகவும் முறையாக விசாரணை நடத்தப்படும் என மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். சமூகப் பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதற்காக வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக ஆதாரமற்ற ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



