காவல் நிலையத்திலிருந்து தப்பிய ஐவர் வழிப்பறியின் போது மீண்டும் பிடிப்பட்டனர்!

top-news

ஜூன் 30,


கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதற்காக நம்பப்படும் ஐவர் நீதிமன்றச் சிறையிலிருந்து தப்பியவர்கள் நேற்று மீண்டும் வழிபறியில் ஈடுபட்ட போது காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சம்மந்தப்பட்ட ஐவரும் கடந்த ஜூன் 22 இரவு 10 மணியளவில் கோத்தா பாரு Pasir Mas நீதிமன்றச் சிறையிலிருந்து தப்பியதாகவும் கோத்தா பாரு முழுவது அவர்களைக் காவல் அதிகாரிகள் தேடி வந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் Kampung Kubang Bongol சாலையில் 46 வயது பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபடும் போது காவல் அதிகாரிகளிடம் சிக்கினர். 

கைது செய்யப்பட்ட ஐவரும் 38 வயது Mohd Safiuddin Hanif, 32 வயது Muhamad Norshamzee, 31 வயது Akmal Zahari, 37 வயது Haris Zakaria, 23 வயது Alif Izham Hussim என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான Mohd Safiuddin Hanif எனும் ஆடவர் சிறையிலிருந்து தப்பிக்கும் போது காவல் அதிகாரியைத் தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட ஐவரையும் Pasir Mas Sesyen நீதிமன்றம் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.


Lima banduan yang melarikan diri dari lokap Mahkamah Pasir Mas pada 22 Jun lalu berjaya ditahan semula ketika cuba melakukan samun di Kampung Kubang Bongol. Kesemua suspek kini direman untuk siasatan lanjut di Mahkamah Sesyen Pasir Mas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *