வங்காளதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவில் 51 பேர் பலி

top-news
FREE WEBSITE AD

டாக்கா, ஜூலை 13-

வங்காளதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் பருவமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தென்கிழக்கு வங்காளதேசத்தின் சட்டோகிராம், காக்ஸ் பசார், பந்தர்பன் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மீட்பு பணிகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

காக்ஸ் பசார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதி முகாம்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்புகள் மழையால் பாதிக்கப்பட்டதால் பலர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்க வங்காளதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *