வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புந்தோங் சட்டமன்ற அலுவலகத்தில் உதவி!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 17,

நேற்று பெய்த கனமழையால் ஈப்போவில் பல குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் புந்தோங் சட்டமன்ற அலுவலகத்தில் முதற்கட்ட வெள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுவதாகப் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN தெரிவித்தார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்ட புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன் காவல்துறைக்கும் மீட்பு அதிகாரிகளுக்கும் உதவியாகத் தொண்டூழியர்களை வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாகத் தெரிவித்தார். 

அதிகாலை 3 மணியளவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகப் பேராக் மாநில் வெள்ள நிவாரண ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரையில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்ட நிவாரணப் பொருள்கள் புந்தோங் சட்டமன்ற அலுவலகத்தில் தயார்நிலையில் இருப்பதாகவும் உதவிப் பொருள்களை வழங்க விரும்பும் ஆர்வலர்கள் வரவேற்கப்படுவதாகவும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *