கூச்சிங்கில் வெள்ளநிலை முழுமையாக சீரடைந்தது

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், மார்ச் 11-

சரவாக் மாநில தலைநகர் கூச்சிங்கில் ஏற்பட்ட வெள்ளநிலை இன்று முழுமையாக சீரடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்காலிக நிவாரண மையங்களாக செயல்பட்ட இரண்டு இடம்பெயர்வு மையங்கள் (PPS) இன்று மதியம் மூடப்பட்டன.

சரவாக் மாநில பேரிடர் மேலாண்மை குழு (JPBN) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று திறக்கப்பட்ட தற்காலிக முகாம்கள் இன்று மதியம் 12 மணிக்கு மூடப்பட்டன.

நேற்று காலை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கூச்சிங் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. தற்போது நீர்மட்டம் குறைந்ததையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *