சபா வெள்ளத்தில் 415 பேர் பாதிப்பு! MET MALAYSIA தொடர் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 15,

சபாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் கனமழை புயல் ஆகியவைத் தொடரும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி 113 குடும்பங்களைச் சேர்ந்த 415 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாவில் மொத்தம் 22 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுமார் 59 குடும்பங்கள் வீடுகளை இழந்திருப்பதாகவும் சபா மாநில இயற்கை பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. சபாவின் Kuala Penyu, Beaufort, Keningau, Tambunan, Papar, Putatan, Penampang, Kota Kinabalu, Tuaran, Kota Belud ஆகிய 10 பகுதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வெள்ள நிவாரண மையங்களை இடமாற்றம் செய்யவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் சபா மாநில மீட்பு ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *