சபா வெள்ளம் – 81 பேர் இன்னும் தற்காலிக முகாமில் தஞ்சம்
- Surendran Sumdraraj
- 04 Mar, 2026
கோத்தா கினபாலு, மார்ச் 4-
சபா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளநிலை அதிக மாற்றமின்றி தொடர்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, போபோர்ட் பகுதியில் 28 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 81 பேர் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபா மாநில பேரிடர் மேலாண்மை குழு (JPBN) செயலாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று மாலை 4 மணிக்கு பதிவான 29 குடும்பங்களைச் சேர்ந்த 82 பேருடன் ஒப்பிடுகையில், தற்போது ஒருவரும் ஒரு குடும்பமும் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் தற்போது தற்காலிக நிவாரண மையமான (PPS) பனிர் மாநில சட்டமன்ற மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிவாரண மையம் கடந்த பிப்ரவரி 25 முதல் செயல்பாட்டில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இன்று காலை நிலவரப்படி ஐந்து கிராமங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேவையான உதவிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



