வெள்ளத்தால் 6 பள்ளிகள் சேதம்! 1,038 மாணவர்கள் பாதிப்பு!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 28,

நெகிரி செம்பிலானில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தில் சிரம்பானில் உள்ள 6 பள்ளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக நெகிரி செம்பிலான் மாநில வெள்ள நிவாரண ஆணையம் தெரிவித்துள்ளது. சிராம்பானில் உள்ள Jijan தேசிய பள்ளி, Sega தேசிய பள்ளி, Jimah தேசிய பள்ளி, Tanah Merah Site A சீனப் பள்ளி, Port Dickson இடைநிலைப்பள்ளி, Dato Shamsudin Nain இடைநிலைப்பள்ளி என மொத்தம் 6 பள்ளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வெள்ள நீர்மட்டம் குறைந்தாலும் பள்ளி வளாகங்கள் பாதிகப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட 6 பள்ளிகளில் பயிலும் 1,038 மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் இயங்கலையில் கல்வி கற்கும்படியான சூழலை நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வி இலாகா ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் வகுப்பறைகள், மேல் கூரைகள் என தொடர் மழையாலும் புயலாலும் பாதிக்கப்பட்ட நிலையில் அடுத்த 2 நாள்களுக்குத் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அடுத்த வாரம் மீண்டும் கற்றல் கற்பித்தல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *