டி.ஏ.பி கட்சியைத் தடை செய்ய வேண்டும்! 300 மலாய் அமைப்புகள் ROS-இல் புகார்!
- Thinagaren Sanggaren
- 14 Nov, 2025
நவம்பர் 14,
டி.ஏ.பி எனும் அரசியல் கட்சி நாட்டின் இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மலாய்க்காரர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதால் டி.ஏ.பி கட்சியை மலேசியாவில் தடை செய்ய வேண்டுமென 300 அரசு சாரா பொது இயக்கங்கள் சங்கப் பதிவு இலாகாவில் புகார் அளித்துள்ளனர். டி.ஏ.பி கட்சி மலேசிய அரசியலமைப்பிற்கு முரணாக இருப்பதாகவும் அதன் கொள்கைகளை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் UMMAH மலாய் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் Mohd Zai Mustafa வலியுறுத்தினார்.
மலேசியாவின் அதிகாரப்பூர்வ மதமானது இஸ்லாம் மட்டுமே, மலாய்க்காரர்கள் பூமிப்புத்ராக்கள் எனும் அடிப்படையில் சிறப்பு சலுகைகள், மலாய் மொழி மட்டுமே தேசிய மொழி, மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி, மலாய் ஆட்சியாளர்கள் சுல்தான்கள் மாமன்னர் ஆகியோருக்கும் முதன்மை அங்கீகாரம் என டி.ஏ.பி கட்சியினர் முக்கியமாக இந்த 4 சட்டங்களை மீறுவதால் மலாய்க்காரர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் டி.ஏ.பி கட்சியைத் தடை செய்ய வேண்டும் அந்த 300 பொது இயக்கங்களும் வலியுறுத்தியுள்ளன.
தற்போது அளிக்கப்பட்டிருக்கும் புகார்களின் அடிப்படையில் டி.ஏ.பி கட்சியை உடனடியாக ரத்து செய்து, அதன் பின்னர் சங்கங்கள் பதிவு இலாகாவான ROS மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென 300 மலாய் அரசு சாரா பொது இயக்கங்களும் அழுத்தம் கொடுத்துள்ளன. மலேசியாவில் குறிப்பிட்ட மலாய் மக்கள் மீதும் இஸ்லாத்திற்கு எதிராகவும் மலாய் மொழிக்கு எதிராகவும் டி.ஏ.பி கட்சியைச் சார்ந்தவர் அவதூறு கருத்துகளைப் பரப்புவதால் நாட்டின் நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாக 300 மலாய் அரசு சாரா பொது இயக்கங்களை ஒருங்கிணைத்த UMMAH மலாய் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் Mohd Zai Mustafa தெரிவித்தார்.,
சங்கங்கள் பதிவு இலாகாவான ROS-இன் சட்டம் 1966இன் 832 ஆவது விதிப்படி மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்திற்கும் முரணாகச் செயல்படும் எந்தவோர் அமைப்பாக இருந்தாலும் அந்த அமைப்பின் பதிவு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற விதியின் கீழ் டி.ஏ.பி கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டுமென PERKASA மலாய் அமைப்பின் தலைவர் Tuan Syed Hassan வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



