மகளுக்குப் பாலியல் தொல்லை! தந்தை கைது! PASCATRAUMA நோயால் பாதிக்கப்பட்ட மகள்!
- Thinagaren Sanggaren
- 28 Jan, 2026
ஜனவரி 28,
தன் சொந்த மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 50 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயதுள்ள சிறுமிக்குக் கடந்த 3 ஆண்டுகளாகத் தன்னுடைய வீட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் நிர்வாணமாகப் புகைப்படங்கள் எடுத்ததாகவும் 50 வயது ஆடவரின் மீது இன்று கோலாலம்பூர் SESYEN நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் 50 வயது ஆடவர் குற்றமற்றவர்கள் என வாதிட்டு மேல்விசாரணையுடன் ஜாமினையும் கோரினார்.
பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்போது மன உளைச்சலில் இருப்பதாகவும் PASCATRAUMA நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயார் மருத்துவமனைக்குச் சிகிச்சை செல்லும் ஒவ்வொரு நாளும் தனது தந்தையால் தாம் பாலியல் தொல்லைக்கு உள்ளாகுவதாகப் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். வழக்கை விசாரித்த கோலாலம்பூர் SESYEN நீதிமன்ற நீதிபதி மேலதிக விசாரணையைப் பிப்ரவரி 27 தொடர்வதாகவும் கைது செய்யப்பட்ட ஆடவருக்கு நிபந்தனையுடன் RM 10,000 ஜாமின் வழங்குவதாகவும் உத்தரவிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



